
வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளைய தினத்தில் மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் இன்றைய தினம் பாடசாலைகள் நடைபெற்ற போதிலும், மாணவர்கள் நேர காலத்தோடு வீடுகளிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்றைய தினத்தில் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.