January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலை: மண்சரிவில் சிக்கி மூவர் பலி!

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கன, தொபேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மண்சரிவினால் வீடொன்று முற்றாக மண்ணில் புதையுண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவில் சிக்கிய நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், அவருடைய 8 வயதுடைய மகள் மற்றும் 14 வயதுடைய உறவுக்கார சிறுமியின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

This slideshow requires JavaScript.