May 13, 2025 14:09:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

200 மில்லி மீற்றர் கனமழை பதிவு; யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.

அதனால் மாவட்டத்தில் பெரும் பகுதி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால் யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது.

மாகாண ஆளுநருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

இதேவேளை தொடர்ந்தும் பெய்யும் கனமழையால்யாழ். நகர் மற்றும்  நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

This slideshow requires JavaScript.