2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய 2019/2020 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையத்தள முகவரியில், பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தமது சுட்டெண்ணை குறிப்பிட்டு தமது அனுமதி தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வெட்டுப் புள்ளி விபரங்களை கீழுள்ள இணைப்பில் பார்வையிடலாம்
COP_2019_2020-ENGLISH NEW SYLLABUS (1)
COP_2019_2020-ENGLISH OLD SYLLABUS (1)