May 25, 2025 1:22:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுவரெலியா – ஹட்டன் வீதியில் பாரிய மண்சரிவு!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நுவரெலியா பிளக்பூல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த வீதி ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டிருந்தது.
இதன்பின்னர் பொலிஸாரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியூடான போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் பிளக்பூல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. மழை தொடர்ந்ததால் மீட்பு பணியும் தாமதித்தே ஆரம்பமானது.

இந்த மண்சரிவு காரணமாக சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.