தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிப்பதை தடுப்பதற்கான சட்டப்பூர்வ ஒப்புதல் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக சட்டமா அதிபர் இந்த அனுமதியை வழங்கியதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“உலகின் பல வளர்ந்த நாடுகள் இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களுக்கு செல்ல தடைவிதித்துள்ளன.
சுகாதார அமைச்சு இதற்காக ஒரு செயலியை உருவாக்கி, அதன் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்யும்”
என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்துக்கும் செல்ல நேர்ந்தாலும் அதனை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.