சிவில் செயற்பாட்டாளர் சிறில் காமினி ஆயருக்கு ஆதரவு தெரிவித்து உயர் நீதிமன்றத்துக்கு முன்னால் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சிறில் காமினி ஆயரின் உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் போதே, இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆயர் வெளியிட்ட கருத்தொன்றை அடிப்படையாக வைத்து, சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எனினும், ஆயரைக் கைது செய்யப் போவதில்லை என்று சிஐடி நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி செயற்படும் சிவில் அமைப்பினரை அடக்க முற்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.