July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சாலிஹ் இலங்கைக்கு விஜயம்

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சாலிஹ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கைக்கு வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதியை விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.

‘பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உதைப்பந்தாட்டத் தொடர் 2021’ இன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்கே அவர் வருகை தந்துள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி, இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதியின் தூதுக் குழுவில் முதற் பெண்மணி பஸ்னா அஹமதும் உள்ளடங்குகிறார்.