May 24, 2025 15:18:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வேலணையில் கடற்படையினரின் காணி சுவீகரிப்பு முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம், வேலணை மண்கும்பானில் கடற்படையினரால் முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிக்கும் முயற்சி அரசியல்வாதிகள், மக்களுடைய எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டுள்ளது.

இன்று (08) காலை முன்னெடுக்கப்பட்ட குறித்த காணி சுவீகரிப்புக்கு எதிரா அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில், தமிழ்த்தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த்தேசி மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொது செயலாளர் கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் சுகாஸ் மற்றும் தவிசாளர் நிரோஸ் ஆகியோரும் குறித்த இடத்தில் பிரசன்னமாகி மக்களுக்கு ஆதரவாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நாளையும் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கடற்கரையினை அண்டிய பகுதியில் மணியம் தோட்ட வீதியை அண்மித்ததாக அமைந்துள்ள காணியொன்றும் கடற்படையினரின் முகாம்கள் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.