November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டிசம்பர் 10 வரை தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகள்

விசேட பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறுவதுடன், இதனைத் தொடர்ந்து டிசம்பர் 10 ஆம் திகதி வரையில் அமர்வுகள் தொடரவுள்ளன.

இதன்படி இன்று முதல் டிசம்பர் 10 வரையிலும், ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்வரும் 12 ஆம் திகதி நிதி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவினால் 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான விவாதங்களின் பின்னர் டிசம்பர் 10 ஆம் திகதி வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

மேலும், 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்தை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இவ்விடயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், இதற்கமைய வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழிக்குத் தனியானதொரு கட்டமொன்றை வழங்குவதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.