May 24, 2025 22:08:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற வானிலை காரணமாக 4,391 பேர் பேர் பாதிப்பு

Raining Common Image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 4,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளடன், 635 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

5 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒருவர் காணாமல் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ,இனிவரும் தினங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு வானிலை அனர்த்தத்திற்கும் முகம் கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும். இது 24 மணி நேரமும் செயற்படுவதாக பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.