File photo
வரவு செலவுத் திட்டத்தில் தமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க போவதாக மத்திய அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்துவோம் என மத்திய அரச சேவை தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவரும் கொழும்பு மத்திய பிரதம அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மூச்சு விடுவதற்கே திணறிக் கொண்டிருக்கும் மக்களை ஏமாற்றாது, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திலேனும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொழிலதிபர்கள் நாட்டு மக்களை சுரண்டும் சூழலை அரசாங்கமே உருவாக்கிவிட்டதாகவும், இதனால் ஒட்டுமொத்த சமூகமும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.