திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகிவருவதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கெரவலப்பிட்டி ‘யுகடனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய மின்சார சபை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வேலைநிறுத்தம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் திடீர் வேலைநிறுத்தத்திற்கு செல்லவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், முன்னறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் திட்டம் இல்லை என ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வேலைநிறுத்தம் இடம்பெற்றால், நாட்டு மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் எனவும், இதனால் இதற்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.