கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1,019 பேர் கைதாகியுள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் உத்தரவுக்கமைய, நேற்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரையில் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 468 பேரும், ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 393 பேரும் மற்றும் வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 70 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.