November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சீமெந்தின் விலை மீண்டும் உயர்வு!

இலங்கையில் சீமெந்து மூடை ஒன்றின் விலையை 177 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

முன்னதாக ஒரு மூடை சீமெந்து 1098 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய விலை ஏற்றம் காரணமாக சீமெந்து மூடையின் விலை 1275 ரூபா ஆக உயர்வடைந்துள்ளது.

ஒக்டோபர் மாத தொடக்கத்தில்  சீமெந்து மூடை ஒன்றின் விலை 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதையடுத்து புதிய விலை 1,093 ரூபாவாக இருந்தது.

கடந்த 30 நாட்களுக்குள் சீமெந்து மூடை ஒன்றின் விலை  உயர்த்தப்படுவது இது இரண்டாவது சந்தர்ப்பம் ஆகும்.

இதேவேளை, சதொச நிறுவனத்திடமிருந்து சீனி மற்றும் அரிசியை கொள்வனவு செய்யும் நுகர்வோர் இன்று முதல் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சதொச நிறுவனங்களில் அரிசி, சீனி போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கு மேலதிகமாக ஐந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தார்.