July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் வெகுவாக உயர்வு!

இலங்கையில் டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் 505 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஒக்டோபர் மாதத்தின் தரவுகளுக்கு அமைய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2,979 ஆக பதிவாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, அடுத்த சில வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து நாட்டில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 59 அதி அபாய வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நுளம்புகள் பெருகும் இடங்களை ஒழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.