
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேவைக்கேற்ப தாம் இருக்கத் தயாரில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘தாம் கூறும்படி இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனரே, அதுதொடர்பில் உங்கள் கருத்து என்ன?’ என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு எவரேனும் கூறும் விதத்தில் இருக்கத் தயாராக இல்லை என்று மைத்திரி பதிலளித்துள்ளார்.
‘நாம் சாதாரணமாக தாய், தந்தை கூறும் போது, அவற்றைக் கேட்டுக்கொண்டு இருந்துள்ளோம். அவர்கள் எமது சித்தப்பர்களா?’ என அவர் ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.