January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சபுகஸ்கந்த கொலைச் சம்பவம்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!

சபுகஸ்கந்த கொலைச் சம்பவவத்துடன் தொடர்புபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட பயணப் பையொன்றில் இருந்து வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக 4 பொலிஸ் பிரிவுகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் இறுதியாக தொடர்பைப் பேணிய இருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.