சீனாவிடம் இருந்து இன்னொரு தொகை சேதன உரத்தைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவருகிறது.
சீனாவில் இருந்து இன்னொரு தொகை சேதன உரத்தைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டு, ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.
இலங்கைக்கு புதிய உரத்தை வழங்குவதற்கு இரண்டு விநியோக நிறுவனங்கள் விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும், தொழில்நுட்பக் குழு அவற்றை ஆராய்ந்து வருவதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சு இந்தியாவில் இருந்து திவர வடிவ இயற்கை உரத்தை இறக்குமதி செய்வதற்கும் தயாராகி வருகிறது.