தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கான பஸ் சேவைகள் இன்று காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினாலேயே பஸ் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரையில் இந்தத் தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் நேற்று மாலை முதல் இடைநிறுத்தப்பட்டது.
கொழும்புக்கு வெளியே ஏனைய பிரதேசங்களில் வழமை போன்று பஸ் போக்குவரத்து நடவடிக்கைகள் நடைபெறும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.