January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிக ஆபத்துள்ள கொவிட் மரபணு தெற்காசிய நாடுகளில் தீவிரம்!

(File photo)

தெற்காசிய நாடுகளில் அதிக ஆபத்துள்ள கொவிட் வைரஸ் தொற்று தீவிரம் அடைந்து வருவதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நுரையீரல் செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு அபாயத்தை இந்த வைரஸ் வகை இரட்டிப்பாக்கும் என பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்காசிய பின்னணியைச் சேர்ந்த 60% மக்களும், ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த 15% மக்களும் இந்த வைரஸ் வகையினால் அதிக பாதிப்பைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி போட்டுக் கொள்வது முக்கியமானது எனவும் இந்த பாதிப்புகளை தடுப்பூசி கணிசமாக குறைக்க உதவுகின்றன எனவும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் இங்கிலாந்து மற்றும் தெற்காசியாவில் உள்ள சில சமூகங்கள் இவ்வாறு கொவிட் மரபணுவினால் அதிகம் பாதிப்பை எதிர்கொள்வதற்கான காரணத்தை இந்த ஆய்வு முழுமையாக விளக்கவில்லை.

ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய மூலக்கூறு தொழில்நுட்பத்தின் கலவையை  பயன்படுத்தி, LZTFL1 என அழைக்கப்படும் இந்த அபாயகரமான மரபணுவை கண்டறிந்துள்ளனர்.