சுவிஸ் விமான சேவை நிறுவனம் இன்று முதல் இலங்கைக்கான நேரடி சேவைகளை மீள ஆரம்பித்துள்ளது.
இதன்படி இரண்டு வருடங்களின் பின்னர் முதலாவது விமானம், சுவிட்சர்லாந்தின் சுவிஸ் நகரில் இருந்து இன்று காலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானத்தின் மூலம் 96 பயணிகள் இலங்கை வந்துள்ள நிலையில், அவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட வரவேற்பளிக்கப்பட்டது.
விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக மற்றும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்று இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, நிதி, கல்வி, மற்றும் கலாச்சாரத் துறைகளில் ஒத்துழைப்பை இந்த விமான சேவைகள் வலுப்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.