
தமக்கு அரச நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி சித்த மருத்துவ பட்டதாரிகளினால் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக வேலையற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது, ”அனைத்து சித்த வைத்திய பட்டதாரிகளுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பை வழங்கு”, ”ஆயுர்வேத வைத்தியர் குறைபாட்டினை உடனடியாக நிவர்த்தி செய்”, ”சுதேச மருத்துவம் அரசுக்கு தேவையில்லையா” போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் வடக்கு மாகாண ஆளுநருக்கும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.