பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குழுவொன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து மூன்று விசேட அதிரடிப்படை முகாம்கள் முடக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் களனி பிரதேசத்திலும், கொழும்பு மாவட்டத்தில் ராஜகிரிய மற்றும் களுபோவில பிரதேசங்களிலும் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவின் 10 விசேட அதிரடிப்படையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப் படை முகாம்களுக்கு மீன் கொள்வனவு செய்ய பேலியகொட மீன் சந்தைக்குச் சென்றதால் மேற்படி படையினருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.