January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நல்லைக்குமரன்’ மலர் வெளியீடும் விருது வழங்கல் நிகழ்வும்

யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவசமய விவகார குழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் ‘நல்லைக்குமரன்’ மலரின் 29 ஆவது இதழ் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.

அத்துடன், சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வழங்கப்படும் ‘யாழ் விருது’ நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெற்றது.

யாழ். நாவலர் மண்டபத்தில் மாநகர சபை ஆணையாளர் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் பிரதம விருந்தினராக யாழ். மாநகர முதல்வரும், சைவ சமய விவகார குழுவின் தலைவருமான வி.மணிவண்ணன் கலந்துகொண்டார்.

அத்தோடு சிறப்பு விருந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் கலந்து கொண்டார்.

ஆன்மீகத் தலைவர்களின் ஆசியுரையோடு ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் நல்லைக்குமரன் நூல் வெளியிடப்பட்டதுடன் இந்த வருடத்துக்கான ‘யாழ்.விருது’ சுன்னாகம் வாழ்வகத்தின் தலைவர் ஆ.ரவீந்திரனுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.