January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழர் கலாச்சார வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாத்தல் வேண்டும்”: டக்ளஸ்

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, “எமது பாரம்பரிய தமிழர் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்து, பராமரிக்கும் செயற்பாடுகளைத் சரியாக திட்டமிடல், அருங்காட்சியகங்களிலுள்ள கலைப்பொருட்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான அகழாய்வு பணிகளை நடைமுறைப்படுத்துவதனால் தமிழர் கலாச்சார வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தொல்லியல் திணைக்களம் மற்றும் தொல்லியல்சார் அமைச்சின் செயற்பாடுகள் அமைய வேண்டும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.