January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சண்டையை விலக்கச் சென்ற பெண் தாக்குதலில் பலி!

நுவரெலியா மாவட்டத்தின் வட்டவளை, மவுன்ஜீன் தோட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பின் போது, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 57 வயதுடைய, இரண்டு பிள்ளைளகளின் தாயொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அயல் குடும்பத்திற்கும் தனது குடும்பத்திற்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது, அதனை விலக்கச் சென்ற அந்தப் பெண் மீது நபரொருவர் தடியொன்றால் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது அந்தப் பெண் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹட்டன் நீதவானின் மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து ஹட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.