
வெலிகம- கப்பரதொட்ட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஹோட்டலின் சமையலறையில் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டலில் இருந்து தீப் பரவுவதை பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஹோட்டலின் உரிமையாளர், மகன் மற்றும் பெண் ஒருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்து, மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த தீப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.