May 31, 2025 19:24:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சபுகஸ்கந்த பகுதியில் கைவிடப்பட்ட பயணப் பையில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

file photo

சபுகஸ்கந்த- மாபிம பகுதயில் கைவிடப்பட்டிருந்த பயணப் பையில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பெண் யார் என்று இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் உள்ள குப்பை மேட்டில் கைவிடப்பட்டிருந்த பயணப் பையில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

களனி பொலிஸ் பிரிவு இதுதொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

அத்தோடு, சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.