January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பென்டோரா பேப்பர்ஸ்’: இடைக்கால விசாரணை அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை

‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணங்களில் பெயர் வெளியான இலங்கையர்கள் தொடர்பான விசாரணையின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவன் திருக்குமார் நடேசன் ஆகியோர் தொடர்பாக இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

ரஞ்சன் ராமநாயக்கவிடமும் வாக்குமூலம் பெற எதிர்பார்ப்பதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.