January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவன் ஒருவன் செலுத்திய சொகுசு வாகனம் பல வாகனங்களில் மோதி விபத்து

கொழும்பு- நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி, எதிர்த் திசையில் பயணித்த மோட்டர் வாகனம், முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

16 வயதுடைய சிறுவன் ஒருவனே விபத்து ஏற்படுவதற்குக் காரணமான அதிசொகுசு வாகனத்தைச் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்து தொடர்பில் மஹபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.