கிளிநொச்சியில் அக்கராயன் ஆறு மற்றும் அதன் சூழல் பகுதிகளை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் ‘நாட்டை கட்டியெழுப்புதல் சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தின அடிப்படையில் இலங்கையில் உள்ள 103 ஆறுகளை பாதுகாக்கும் தேசிய சுற்றாடல் கருத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான ஆறுகளில் ஒன்றாகக் காணப்படுகின்ற அக்கராயன் ஆற்றினையும் அதன் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் வகையில் இன்றைய தினம் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணை தலைவரின் இணைப்பாளர் வை.தவநாதன், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கண்டிருந்தனர்.