உலக வங்கியின் 500 மில்லியன் டொலர் நிதியுதவி ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது.
உலக வங்கியின் தெற்காசியாவுக்கான பிரதித் தலைவர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ முன்னிலையில் கையொப்பமிட்டுள்ளனர்.
விவசாய விநியோகச் சங்கிலிகளை பலப்படுத்தி, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் உள்ள 16 மில்லியன் கிராமிய மக்கள் பயனடையவுள்ளனர்.
நெடுஞ்சாலைகள் அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு கண்காணிப்பு செயலணியொன்று நிறுவப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.