ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை முடித்துக்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகருக்குச் சென்றிருந்தது.
நவம்பர் 12 ஆம் திகதி வரை தொடரும் மாநாட்டின் முதலாம் இரண்டாம் தினங்கள் அரச தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
ஐநாவின் 26 ஆவது பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் 197 நாடுகளைச் சேர்ந்த 25 ஆயிரம் பேர் கலந்துகொள்கின்றனர்.
இதன்போது ஜனாதிபதி பல்வேறு அரச தலைவர்களுடனும் இரு தரப்பு உறவுகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.