January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்வேறு அத்தியாவசிய பொருட்களினதும் கட்டுப்பாட்டு விலையை நீக்கி வர்த்தமானி வெளியானது

இலங்கையில் இதுவரை அமுலில் இருந்த பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்குமான கட்டுப்பாட்டு விலையை நீக்கி, வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பருப்பு, கோழி இறைச்சி, டின் மீன், சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, கிழங்கு மற்றும் பால் மா ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாட்டு விலை நீக்கம் நவம்பர் 3 ஆம் திகதியில் இருந்து அமுலாகுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் குறித்த அதிகாரசபை வெளியிட்டிருந்த 7 வர்த்தமானி அறிவித்தல்களும் இந்த வர்த்தமானி மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளன.