இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிடப்படும் ஒரு கிலோ நாட்டு நெல்லை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, நாட்டு நெல் கிலோ ஒன்று 80 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோ ஒன்று 100 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோ 125 ரூபாவுக்கும், கொள்முதல் செய்ய தொழில் முனைவோர் விரும்புவதாக விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்வதால் நட்டம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீடு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
தாம் அமைச்சராக இருந்த காலத்தில் முதல் தடவையாக நெல் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாவை பெற்றுக் கொடுத்ததை அவரின் உருவ பொம்மையை எரித்த விவசாயிகள் மறந்துவிட்டதாகவும் அளுத்கமகே குறிப்பிட்டார்.
அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நம்பி விவசாயிகள் உடனடியாக விவசாயத்தில் ஈடுபடுமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேட்டுக் கொண்டார்.