‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை இரத்துச் செய்யுமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
குறித்த பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மக்களால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தில் கலந்துரையாடாமல் நியமிக்கப்பட்ட செயலணியினால், ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற நோக்கத்தை அடைந்துகொள்ள முடியாது என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
செயலணியை நியமிக்கும் போது அதன் தலைவரின் கடந்த கால செயற்பாடுகள் கருத்தில் கொள்ளப்படாமையை பேரவை கண்டித்துள்ளது.
தமிழ், இந்து, கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்காததையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டத்தின் முன்பாக, சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் அரசியலமைப்பு உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.