கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியை மூடுவற்கு நடவடிகையெடுக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் அங்கு தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனால் இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்ற பணியாளர்களை வீடுகளில் இருக்குமாறு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற பாதுகாப்புக்காக சேவையில் அமர்த்தப்பட்ட விசேட அதிரடிப்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்று நீக்கம் நடவடிக்கை முடிந்த பின்னர், மீண்டும் 28 ஆம் திகதி நாடாளுமன்றதில் வழமையான பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.