May 5, 2025 10:40:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் 4 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியுடன் பாடசாலை மாணவன் கைது!

மன்னார் மூர் வீதி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மாணவனிடம் இருந்து 4 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.