January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவத்தினர் தயாரித்த சேதன உரம் யாழ். விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது

இராணுவத்தினர் நச்சுத் தன்மையற்ற, இயற்கை முறையில் உருவாக்கிய சேதன பசளை உற்பத்திகள், யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பலாலியில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா சேதன பசளை உற்பத்திகளை விவசாயிகளுக்கு வழங்கி வைத்துள்ளார்.

இலங்கையின் விவசாய நடவடிக்கைகளில் முழுமையாக சேதனப் பசளையினை உபயோகப்படுத்த வேண்டுமென்ற ஐனாதிபதியின் குறிக்கோளுக்கு அமைவாக இராணுவத்தினரின் பங்களிப்புடன் பசளை உற்பத்திகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி ஜகத் கொடித்துவக்கு, யாழ். மாவட்ட விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட பல உயர் இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

This slideshow requires JavaScript.