May 29, 2025 23:26:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி முகமாலையில் 316 ஏக்கர் காணி கையளிக்கப்பட்டது

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கன்னிவெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் இரண்டு தேங்காய் எண்ணெய் ஆலைகள், ஒரு தும்புத் தொழிற்சாலை, வெதுப்பகம் மற்றும் சேதனப் பசளை உற்பத்தி மையம் என்பனவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டடவாக்க இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் இந்திக்க அனுருத்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குறித்த காணிகளை கையளித்துள்ளனர்.