சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் உள்ள தேநீர்க்கடைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக ஐக்கிய தேசிய சுயதொழில் புரியும் வர்த்தகர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய குறித்த சங்கத்தின் செயலாளர் கிரிஷான் மாரப்பே இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டில் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
எனினும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 4,000 டொன் திரவ பெற்றோலிய வாயு எடுத்துவந்த கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கூறப்படுகின்றது.
இதன்படி விரைவில் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.