கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டதற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி அரசியல் நியமனமாக அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலின் அங்கமாக இருக்கக் கூடாதென்று மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
வேந்தருக்கு சட்டப்பூர்வமான நிர்வாக அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் அவர் பல்கலைக்கழகத்தின் கௌரவச் சின்னமாக இருப்பதால், இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அரசியல் நியமனம் பல்கலைக்கழகத்தின் சுதந்திர நிர்வாகம் மற்றும் கண்ணியத்தைப் பாதிக்கும் என்று மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.