January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்சாரம், பெட்ரோலியம், துறைமுக ஊழியர்கள் போராட்டம்!

இலங்கை மின்சார சபை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் துறைமுக அதிகாரசபை ஊழியர் சங்கங்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.

மின்சார சபை தலைமையகத்திற்கு முன்னால் மின்சார சபை ஊழியர்களும், கொலன்னாவ பிரதேசத்தில் பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களும், துறைமுகத்திற்கான நுழைவாயில்களில் துறைமுக ஊழியர்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளனர்.

‘யுகதனவி’ அனல் மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனால் இன்றைய தினத்தில் குறித்த சேவைகளை முன்னெடுப்பதில் பாதிப்புகள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களின் பின்னர் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.