February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயில் சேவைகள் இரத்து

ஜி.சீ.ஈ. உயர்தர மாணவர்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் தவிர்ந்த ஏனைய தபால் மற்றும் அலுவலக ரயில் சேவைகள் நாளை திங்கட்கிழமை முதல் இயங்காது என்று ரயில் திணைக்கள கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய புத்தளம் மார்க்கத்தில் பயணிக்கும் அனைத்து ரயில் சேவைகளும், களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவைகளும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் கரையோர ரயில் பாதையில் நாளாந்த சேவையில் ஈடுபடும் 6 ரயில் சேவைகள் கொள்ளுப்பிட்டி வரையில் இடம்பெறும்.

உயர்தரப் பரீட்சைக் காலப் பகுதிக்கு அமைவாக மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிக்காக விசேட ரயில் சேவைகள் உள்ள சிலாபம், ரம்புக்கனை உள்ளிட்ட சில ரயில் சேவைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பல பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.