ஸ்கொட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உட்பட உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த உச்சி மாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.
இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி சந்திப்பது இதுவே முதல்முறையாகும் .
அப்போது இந்திய பிரதமர் மோடி இஸ்ரேலில் மிகவும் பிரபலமானவர் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
இதனை நேரடியாகவே இந்திய பிரதமரிடம் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் நப்தலி பென்னெட், இஸ்ரேலில் மோடி பிரபலமாக இருப்பதால் தனது கட்சியில் வந்து இணையுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர், வாருங்கள் எனது கட்சியில் இணைந்து கொள்ளுங்கள் என்று கூறியதும் அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.