யாழ்தேவி ரயில் புதன்கிழமை (3) முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிகாலை 5.55 மணிக்கு கல்கிசையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க உள்ள யாழ்தேவி ரயில் மறுநாள் (4) காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து மீண்டும் கல்கிசைக்கு பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயில் தனது நீண்ட சேவையை முன்னெடுத்து வருகின்றது.
எனினும் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து தடைகள் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்த ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.