June 17, 2025 8:09:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீபாவளி தினத்தில் மத்திய மாகாணத்தில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!

எதிர்வரும் தீபாவளி தினத்தையொட்டி  மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகேவிடம் மதுவரி திணைக்கள ஆணையாளருக்கு இது தொடர்பில் பணிப்புரை விடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து  எதிர்வரும் 04 ஆம் திகதி, தீபாவளி தினத்தன்று மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கான மத்திய மாகாண ஆளுநர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.