July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சில வரையறைகளுடன் கர்ப்பிணி தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைக்கலாம்!

இலங்கையில் நீண்ட முடக்கத்துக்கு பின்னர் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

இந்நிலையில், கர்ப்பிணி தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.

இதன்படி சில வரையறைகளுடன் கர்ப்பிணி தாய்மார்கள் சேவைக்கு அழைக்கப்பட உள்ளனர்.

எனினும் நிறுவனங்கள், தமது தேவைக் கேற்ப கர்ப்பிணித் தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்கான சுற்றறிக்கையில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் நோய் நிலைமைகளை உடையவர்களை பணிக்கு அழைக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.