தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சிறில் காமினி ஆயர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சிறில் காமினி ஆயர் தெரிவித்த கருத்தொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஆயருக்கு எதிராக தேசிய புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சிஐடியில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தேசிய புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சிரேஷ் சலே மீது சிறில் காமினி ஆயர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, ஆயர் கைது செய்யப்படவும் சாத்தியமுள்ளது.
இந்நிலையிலேயே, தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி சிறில் காமினி ஆயர் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.